+புன்னகை!+
உன் ஒவ்வொரு சிரிப்பும்
உன்னைச் சுற்றி இருக்கும்
உற்றாருக்கும்
உன்னைச் சார்ந்து இருக்கும்
நல்லோருக்கும்
உன் மூச்சுப்படும் பக்கத்தில்
உள்ளோருக்கும்
உற்சாகம் தரும்!
உன் ஒவ்வொரு வெறுப்பும்
கடுஞ்சொல்லும்
பொறாமையும்
வன்செயலும்
அதே உறவுகளுக்கு
துக்கம் கொடுக்கும்!
ஆக...
புன்னகை விதைப்போம்!
புன்னகை கிடைக்கும்!
தேவையில்லை எதுவும் தந்திரம்!
புன்னகை ஒரு சிறந்த மந்திரம்!
மனிதமனத்தையே மாற்றும் எந்திரம்!
புன்னகை
ஒரு ஒளி கொடுக்கும்
மெழுகுதிரி போல
ஒரு மெழுகுதிரி
பல மெழுகுதிரிக்கு ஒளி கொடுத்து
இருளைப்போக்கி வெளிச்சமாக்கும்!
உலகையே ஜொலிக்கவைக்கும்!
அது போன்ற
ஒரு புன்னகையை உதட்டில் ஏற்றி
பல புன்னகையை பூமியில் பரப்புவோம்..!
உலகமெல்லாம் ஜொலிக்கட்டும்!

