சத்தியமாய் நானில்லை

பேச்சுப் பல்லக்கு
தம்பி கால்நடை
சத்தியமாய் நானில்லை..!

படிப்பது தேவாரம்
இடிப்பது சிவன்கோயில்
சத்தியமாய் நானில்லை..!

முழுப் பூசணிக்காயை
சோற்றில் மறைப்பது
சத்தியமாய் நானில்லை..!

எரியிற வீட்டில்
பிடுங்கினது லாபமென்றிருப்பது
சத்தியமாய் நானில்லை..!

எதிரிக்குக் குழிவெட்டி
சதியெனும் வலைவிரிப்பது
சத்தியமாய் நானில்லை..!

ஒன்றுமே இல்லாதவொன்றிற்கு
பரிவட்டம் பிடிப்பது
சத்தியமாய் நானில்லை..!

பொய்மையை உரைத்து
மகுடத்தைச் சூடிக்கொள்வது
சத்தியமாய் நானில்லை ...!

உண்மையை உரைத்து
வெறுப்பைச் சம்பாதிப்பது
அது மட்டும் நான்தான்
நானென்னும் இந்த ஆன்மாதான்..!
--------------------------------------------------------------------
தோழி துர்க்கா

எழுதியவர் : தோழி துர்க்கா (8-Oct-13, 1:31 pm)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 91

மேலே