இவர்களிடம் கற்போம் ....!!
 
 
            	    
                தள்ளுபடி என்றால் 
தள்ளுமுள்ளு போராட்டம் ...!
இலவசம் என்றால் 
இடித்து தள்ளி முன் ஓட்டம் ...!
திரை அரங்கோ 
திருக் கோவிலோ 
முண்டியடித்து 
முன்னேசெல்வதிலே 
குறியாய் மக்கள் கூட்டம் .....!!
கும்பி பசித்தாலும் 
குடிக்கும்பால் அருகிருந்தாலும் 
குடும்பத்தினரே  ஆனாலும் 
தன்முறை வரும்வரை 
வரிசையாய் அமர்ந்து 
பொறுமை காக்கும் ...
ஆறறிவு ஜீவிக்கு உதாரணமாய் 
ஐந்தறிவு ஜீவன்கள் .....!!!
 
                     
	    
                

 
                             
                            