நட்பு இறைவனின் கொடை ..!!!

நட்புக்குள் நன்றாக சிக்கி
விட்டோம் -ஆனால்
துன்பமில்லை
துன்பத்தை தாங்கும்
கரங்களை உடையது
நட்பு கரம் தான் ....!!!

பலர் கேட்கிறார்கள்
நட்பு துரோகம்
செய்வதில்லையா ..?
நிச்சயமாக நட்பு
துரோகம் செய்யாது
நண்பன் துரோகம் செய்வான் ...!!!

நட்பு இறைவனின் கொடை
நண்பன் மானிட உறவு
மானிட உறவு ஆசா பாசத்துக்கு
அடிமைப்படும் -சில நண்பர்
துரோகம் செய்யும் ...!!!
இறைவன் யாருக்கும்
தீங்கு செய்ய மாட்டான்
நட்பு துரோகம் செய்யாது ....!!!

எழுதியவர் : கே இனியவன் (8-Oct-13, 5:45 pm)
பார்வை : 216

மேலே