நட்புக்கு வயது ஏது ...?

காதலுக்கு பருவம் வேண்டும்
நட்புக்கு ஏது பருவம் ...?
முளைச்சு மூணு இழை விழாத
உனக்கு காதல் ஒரு கேடோ
என்பார்கள் ...!!!

நட்புக்கு வயது ஏது ...?
பசுமையான நினைவுடன்
பசுமையான எந்த பருவத்திலும்
பகைமை இல்லாமல் வருவதே
உயிர் நட்பு ....!!!

சிறுவயதில் பட்டாம் பூச்சியை
பிடிப்பதில் நட்புக்குள்
ஆனந்தம் ....
முதுமையில் பட்டாம் பூச்சியாய்
பறந்த நட்பை நினைத்து
ஆனந்தம் .....!!!

எழுதியவர் : கே இனியவன் (8-Oct-13, 5:57 pm)
பார்வை : 189

மேலே