நானும் மதுரைக்காரன் தாண்ட

நாங்கள்
பாண்டிய தேசத்து
மக்கள்......

அன்பாய்
வந்தவர்க்கு எம்
ஆயுள் தந்தோம்

தமிழுக்கு
முதலிடம் தந்தோம்
பிற மொழிகாரர்க்கு
வாழ்விடம் தந்தோம்

மங்காத மணம் எம்
மல்லிக்கு உண்டு
குடி கொல்லாத
பெருங்குணம்
எம்மக்களுண்டு

வீரத்தின் பிறப்பிடம்
வின்வம்புக்கு
சென்றிடோம்

ஏறு பிடித்திடும்
எழில் நகரம் - இன்னும்
தாவணிகள் உயிர்
வாழும் தமிழ் நகரம்

நாங்கள்
விருந்தோம்பலின்
வினைத்தொகை


மீனாட்சி
ஆண்ட பெருநகரம்
பாரினில்
தூங்காத
ஒரே நகரம்

இது
கண்ணகி
எரித்த மதுரையின்
மிச்சம்
ஆயினும் - நாங்கள்
நேர்மையின் உச்சம்

பெருமையாய்
சொல்வென்
நானும்
மதுரைக்காரன் தாண்ட ...........

பாண்டிய இளவல் (மது )

எழுதியவர் : பாண்டிய இளவல் (மது ) (9-Oct-13, 7:11 pm)
பார்வை : 265

மேலே