பழைய நண்பன்
வெயில் நேரம் கொட்டும் மழை,
வாழ்க்கை எனும் வானவில் பாதைக்கு
வந்த வழிகாட்டி,
என் தனிமையோடு போரிட்டு
என்னோடினைந்த இருதயம்!
என் உதிரம் சேர்ந்த உறவுக்கு,
நான் கொடுத்த உவமைகள் இவை....
என் அருகிருக்கும் அன்னைக்கு,
நா உதிர்த்த பரிசில்கள் இவை.....
நான் விழி இறக்கும் கண்ணீரில் அமுதெடுத்து,
எனக்கே ஊட்டும் சாணக்கியன் அவன்!
நான் புன்னகைக்கும் போதெல்லாம்,
அமாவாசை இரவுக்கு,
ஒளியூட்டிய பகலவன் அவன்...
நான் கண்ட தோல்விக்கு,
நடுவர்கள் விட்ட தவறென்று,
வரைவிலக்கணம் கூறிய வல்லவன் அவன்!
நான் என்ற சொல்லுக்கு இலக்கணம் அமைத்தவன் அவன்!!!
இப்போது மனமுடைக்கும் பாராங்கல்லும் அவன் தான்!!!
புண்பட்ட தேகத்தில்,
மருந்தென்று சொல்லிக்கொண்டு,
விஷம் தடவுகிறான்,
மண்டியிட்டு இறை துதிக்கும் நேரம் கூட,
"மழை வருமா?" என்று கேலிவார்தை வீசுகிறான்...
என் இன்பமும் துன்பமும் அவனுக்கு வேடிக்கை தான்,,
இரண்டிலும் நகைக்கிறான்...
நான் நடக்கும் பாதைக்கு பூவோடு சேர்த்து முல்லும் தூவுகிறான்.....
நண்பா!!!
துயரத்திற்கு இன்பத்தின் முதற்படி என்று
புதுமொழி கூரியவனும் நீதான்,
இன்று அந்த இன்பத்தின் முதற்படியில்
என்னை வீழ்த்துவோனும் நீதான்!!!!