உண்மை நட்பு உள்ளவரை ....

முகங்களே அறியாத முகல்நூல் நட்பையும்
என்றும் அறியாத எழுத்து தள நண்பர்களும்
மனதில் ஒன்றிய மின்னஞ்சல் நண்பர்களும்
பலவழியாய் இணைந்திட்ட நம் நண்பர்களும்
என்றுமே நம்மின் நெஞ்சில் நிலைத்திட்டால்
பாலமாய் இருப்பர் நாம் பாரினில் வாழும்வரை
துரும்பாய் இருப்பர் நம் துயுர்களை துடைத்திட
கரும்பாய் இனிப்பர் நம் காலம் முழுவதும்
இனிதே உதவுவர் இன்பங்கள் அடைந்திட
துடுப்பாய் இருப்பர் வாழ்வெனும் பயணத்தில்
ஊன்றுகோலாய் இருப்பர் உதவிகள் செய்வதில்
இறுதியாய் வருவர் நம்மை இறுதியாய் காண
அந்த நான்கு பேரில் ஒருவராய் இருப்பர்
உண்மை நட்பில் உறுதியாய் இருந்தால்
உள்ளத்தில் வைப்பர் உயிராய் உள்ளவரை !
என்றும் நட்புடன் ,