நாகூர் ஆண்டகை பாடல்

வங்கக் கடலோரம்
பொங்கி வழியும் காட்சி
தங்க மனம் கொண்ட
இறைநேசர் காதிர் மீரானின் அரசாட்சி...

நம்பினோர்களெல்லாம் அவரது சாட்சி
நல்லோர்களுக்கெல்லாம் அண்ணல் பெயர் உயிர்மூச்சி
மனம் நெகிழ்ந்து கேளு - அவர்
நபிகள் நாயகத்தின் ஆளு

அள்ள அள்ள அருள் சுரக்கும்
வல்ல அல்லாஹ்வின் கிணறு
அன்பு தம்பி நீயும் -அதையும்
கொஞ்சம் உணரு....!

தட்ட தட்ட திறப்பாரே
தன் அருட் கதவை எம்மான்
திட்ட திட்ட துடைப்பாரே
உன் இருள் கதவை பெருமான்
கொட்டி கொட்டி கொடுப்பாரே
கோபப்பட்ட பின்னாலே
முட்டி முட்டி நின்றாலே
தாகம் தீர்ப்பார் பின்னால்...

கெஞ்சி கெஞ்சி கேட்போர்க்கு
கொஞ்சி கொடுக்கும் வள்ளல்
அஞ்சி அஞ்சி அழைப்போர்க்கு
பஞ்சு நெஞ்சம் அண்ணல்
நித்தம் நித்தம் கேட்டால்
மொத்தமாக தருவார்
யுத்தம் சப்தம் போட்டால்
மௌனமாக இருப்பார்...!
(அன்பு தோழர்களே தேர்வு புள்ளிகள் இந்த படைப்புக்கு இட வேண்டாம்)

அன்புடன்

நாகூர் கவி

எழுதியவர் : muhammadghouse (10-Oct-13, 12:23 pm)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 90

மேலே