வையாமல் வைகிறார்கள் பிள்ளைகள்

கடுமையாக உழைக்கிறேன்
பெரும் பாடு படுகிறேன்
சேர்க்கிறேன் அளவிலா சொத்துக்களை
என் மகனுக்கு தேவைக்கு மேலே
என் பேரனுக்கு போதிய அளவிலே
என் சந்ந்ததினருக்கு வேண்டிய வகையிலே
நீர் நிலைகளை அழித்து
வயல்களை விற்று
மரங்களை வெட்டி
மலைகளைத் தோண்டி
மண்ணை வாரி
கழிவுகளைத் தேக்கி
இயற்கையைத் தொலைத்து
காசாக்கிறேன்
என் பிள்ளைகளுக்கு கொடுக்க
கொடுட்கிறேன் தாராளமாக
அவர்கள் இன்று
குடி தண்ணீரை விலைக்கு வாங்கி
நல்ல காற்றைத் தேடி
ஓடுகிறார்கள் தலை தெறிக்க
மருந்தும் மருத்துவமும்
அவர்களை மிரட்ட
என்னை வையாமல்
வைகிறார்கள் மனதுக்குள்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (12-Oct-13, 8:58 am)
பார்வை : 151

மேலே