இயல்பான கொடையிது

​பருவங்கள் மாறாது
பருவத்தே நடந்திட்டால்
உருவங்கள் மாறாது
உண்மைகளே நிகழ்ந்திடும் !

மழையும் பொய்க்காமல்
மும்மாரி பெய்திட்டால்
பசுமையும் நிலைத்திடும்
பாலையும் சோலையாகும் !

விளைநிலங்கள் விற்காது
விற்காமல் நிலைத்திட்டால்
விளைந்திடும் நெற்கதிரும்
விளைச்சலும் நிலையாகும் !

பசுமையின் பேரழகை
கண்டிடுவீர் படத்தினில் !
வரைந்த ஓவியமல்ல
நிலைத்த விளைநிலமே !

இயற்கை வழங்கிட்ட
இயல்பான கொடையிது !
இருப்பதை ரசித்திடவோ
இருவிழிகள் போதாது !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (13-Oct-13, 2:40 pm)
பார்வை : 2814

மேலே