முருகன் குறித்த பழமொழிகள்

வேலை வணங்குவதே வேலை.

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.

வயலூர் இருக்க அயலூர் தேவையா?

காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.

அப்பனைப் பாடிய வாயால் – ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?

முருகனுக்கு மிஞ்சிய தெவமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)

கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.

கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்

பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?

சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.

செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?


திருத்தணி முருகன் வழித்துணை வருவான்

வேலனுக்கு ஆனை சாட்சி.

வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.

செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை

_________________
அன்புடன்
அ.இராமநாதன்

எழுதியவர் : கே இனியவன் (13-Oct-13, 5:10 pm)
பார்வை : 71

மேலே