வலிகள்

விழிகளில் ஒரு வலிகள்
உன் நினைவுகளின் கண்ணீர்கள்
இவைக் காலத்தின் சதுரங்கம்
உன் கண் பார்வையில் என் ஆயுட்காலம்
வலிக்கும் நினைவுகளின்
வலிநிவாரணி உன் ஒற்றைப் பார்வை அன்பே

வலிக்கும் நினைவுகளோ?
நினைவுகளின் வலியோ?
ஏதரியேன்..என் காதல் தவிர
இன்று என் இதயம் மட்டும் துடிக்கிறது
தலையை இழந்த உடலாய்

உன் நினைவுகளுக்கு அபிஷேகம்
என் கண்ணீர் துளிகளில்
அன்பே
என் கண்ணீர் துளிகளுக்கு
கங்கையைவிட புனிதம் அதிகம்
அவற்றின் ஆதி உன் நினைவுகள் என்பதால் ..
உணர்ந்துக்கொள்
உன் பிரிவால் அழுகிய என் இதயத்தின்
உன் நினைவு ஒன்றே வாசனை திரவியம்

எழுதியவர் : harihari (13-Oct-13, 9:03 pm)
Tanglish : valikal
பார்வை : 98

மேலே