பாரதிக்கு நோபல் பரிசு
கவி உலகின் பிதாமகன்
உலக கவிகளுக்கெல்லாம்
உன்னத தலைவன்
கலைமகளின் மூத்த புதல்வன்
என் பாரதி..
ஏனோ,அன்று நாம் அவனை
புரிந்துகொல்லவில்லை.
நம் அறிவு,அவனுடன்
ஒட்டவில்லை என்பதே உண்மை.
கம்பனை ஆதரிக்கவாவுது
சடையப்ப வல்லல் இருந்தார்.
நம் கவிங்கனுக்கு உணவு தர
யார் இருந்தார்கள்.
ஆள வந்தவன் அறிந்த பாரதியின்
புரட்சி தீ...
நம்மவர்களுக்கு அது மத்தாப்பாய்
போனது ஏனோ ?
நான் அறிந்த விடுதலை போராட்டதில்
நாட்டின் விடுதலை ஒன்றே இலக்கு..
பாரதியின் போராட்டதில்
பெண் விடுதலை,
பெண் கல்வி
சாதி மறுப்பு,
நாட்டின் ஒருமைபாடு
நாட்டின் வளர்ச்சி,
ஆன்மீகம்,
காதல்
இன்னும் நான் அறியாத பல.
உணவுக்கே வழி இல்லாத போது
தேடி சோறு நிதம் தின்று
பலசின்னசிரு சிறு கதை பேசி
..............................................
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!
என்று பாரதியால் மட்டுமே பாட முடியும்..
எலும்பும் சதையும் கொண்ட மனிதனல்ல அவன்.
அவனது குருதியின் ஒவ்வொரு அணுவும்
தாய் நாட்டின் வளர்ச்சி பற்றியது.
பாரதியின் எண்ணத்தில் தமிழ் தாய் பிறந்தாள்
கைகளினால் தாலாட்ட பெற்றால்.
எழுதுக்களில் நடை பயின்றால்.
கவிதைகளில் உள்ளம் மகிழ்ந்தால்.
வங்காள கவிங்கனுக்கோ தன் படைப்பை
ஆங்கிலத்தில் மொழிபெயர்ததனால்
உலக அங்கிகாரம் கிடைத்தது..
நம் கவிங்கனோ உள்ளூரிலே
அங்கிகாரம் இன்றி தவித்தான்.
சொல் புதிது,சுவை புதிது
என அவனையும் புலம்ப
வைத்ததுதான் நம்மவர்களின் சாமர்தியம்.
தமிழால் விளம்பரம் தேடிகொண்டவர்கள்
வாழும் நாட்டில்..
தமிழை உலகெங்கும் விளம்பரபடுத்தியவன்
என் வரகவி..
அவனது மரணத்தில் உடலில் மொய்த்த
ஈக்கள் எண்ணிக்கயை விட
மனிதர்களின் எண்ணிக்கை குறைவு..
இது கவிபேரருசுவின் பதிவு.
இதற்கு எத்தனை விளக்கங்கள் சொன்னாலும்
தமிழ் தாய் கேட்கபேவதில்லை..
கவிதை எழுதும் ஒவ்வொரு
கவிங்கனுக்குள்ளூம்
தங்க இருக்கை போட்டு
சிங்கமாய் வீற்றிருப்பான்
என் பாரதி..
பாரதியாரை யார் என்று நம்மவர் கேட்க
இடம் கொடுத்து விடாதே தமிழா!
கவிதை எழுதுபவன் கவிங்கனல்ல
கவிதையாய் வாழ்ந்தவன் தான் மகாகவி..
என் ஆசைக்காக
மகாகவியின் பாதத்தில்
இலக்கியதிர்கான நோபல் பரிசை
சமர்பிக்கிறேன்.