!!!எனக்காய் பூத்த பூவே !!!

முதலில் பூத்த பூவே -என்
முகத்தை பார்ப்பாயா ?
இரண்டாமுறை பூத்த பூவே
என் இதழை கேட்பாயா

மூன்றாமுறை பூத்த பூவே
என்னை முத்தமிட சம்மதிப்பாயா
நான்காமுறை பூத்த பூவே
நான் தரிசிக்க வருவாயா ?

ஐந்தாமுறை பூத்த பூவே
நான் அள்ளிக்கொள்ள வருவாயா
ஆறாமுறை பூத்த பூவே -என்னை
பறிப்பாயோ என்று சொல்வாயா?

ஏழாமுறை பூத்த பூவே
என்னை ஏறெடுத்து பார்ப்பாயா ?

எத்துனைமுறை பூத்தாலும்
எனக்கென்றே பூத்த பூவே
இந்த ஏழைகென்று ஏழு
ஏழு ஜென்மம் இருப்பாயா ??

எழுதியவர் : செல்வி சிவகுமார் (15-Oct-13, 10:40 am)
பார்வை : 120

மேலே