வீட்டில் எல்லோரும் உணவு முடித்துவிட்டு படுத்திருந்தார்கள். இரவின் மென்மையானத் தழுவலில், செல்வி நன்றாக தூங்கிவிட்டாள். ஈழவேந்தனுக்கு மட்டும் ஏனோத் தூக்கம் வரவில்லை, ஆகையால், அவன் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு இருந்தான். அவனது மனம் கட்டவிழ்ந்த புரவியாய் அதிவேகத்தில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தது. பள்ளிக்கூடம், வகுப்பறை, வகுப்பறைத் தோழர்கள், தோழிகள், விளையாட்டுத்திடல், இப்படியே ஓடிக்கொண்டு இருந்த அந்த மனப்புரவி. கடைசியாக நெல்லி மரத்தையே சுற்றி சுற்றி ஓடிக்கொண்டு இருந்தது.
என்னங்க..!'' அந்த வீடு நல்லா இருக்குமா..?'' ''ஒன்னும் பிரச்சனை இருக்காதே...?'', என்ன கூட்டி
பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சார் !
அப்புறம்....அந்த கேட்டுச் சரக்குகள்....அது கிடக்கட்டும் அந்தந்த "மூளைகளில்"....!
அண்ணாவின் கதை குறித்த தங்களின் விளக்கம் தெளிவு தருகிறது ! நன்றி விளக்கத்திற்கு !
இங்கு எப்போதும் போல உள்ள விசேஷங்கள் தான் நிரம்பிக் கிடக்கிறது. ஹஹஹஹாஹ் !
குறுக்கீடுகள் தொடரும் என்று தான் நினைக்கிறேன்...தொடர்வோம்.....! 07-May-2014 9:39 pm
வணக்கம் கலை..!
உங்கள் பிறந்தநாளன்று நான் இங்கு ஊரிலில்லை. குறுஞ்செய்தி மூலம் அனுப்பிய வாழ்த்துச் செய்தியும் வழக்கம்போல,உங்களிடம் சேரவில்லை. நேற்றும் கருத்து சொல்லும் பரபரப்பில், வாழ்த்து சொல்ல மறந்து போனது..! மன்னிக்கவும். இருந்தாலும்.தாமதமாய் உங்களுக்கான பிறந்த நாள் வாழ்த்துகளை இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.
அப்புறம்,நிலாவின் கதைக்கான எனது விமர்சனத்திற்கு,உங்கள் கருத்து.. வாசித்தேன்.மகிழ்ச்சி..!
விமர்சனம்,கருத்து..ஆகியவை நமது தளத்தில் எவ்வாறு புழங்கப்படுகிறது என்றும் சுட்டியிருந்தீர்கள். “ கேட்புச் சரக்குள்..?.. மிகச்சரி..!
நிலாவின் கதையில்,கருப்பொருளாக இருப்பது மரம்தான். அந்தக் கதை இயங்கும் களமே வாடகை வீடு..!
அதனால்,கருப்பொருள் சிதைவு ஏற்படவில்லை என்பதே எனது கருத்து.
“ஈழவேந்தன் ஒரே வீட்டில் இருந்தால் ஒருவேளை அவன் அந்த ஒரு நெல்லி மரத்தை தான் வளர்திருப்பான்...வீடு மாறுதல் அடிக்கடி நடைபெறுவதால் போகின்ற எல்லா வீட்டிலும் அவன் மரம் நடுகிறான்...எனவே மரநடுகை மறைமுகமாக நடந்துக் கொண்டே இருக்கிறது...என்ற விடயத்தைக் கொஞ்சம் அழுத்தமாக கூறி கதையை முடித்தால் நல்லது கெட்டது ரெண்டுமே கொண்ட முடிவாக அமைய வாய்ப்புண்டாகும் அல்லவா ?”
நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள மேற்கண்ட வரிகளில் தெரிவித்த முடிவை,இக்கதைக்கான “முடிவுகளில் ஒன்றாக இருந்தால் நல்லது..” என ஏற்கனவே எனது கருத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன்.
இனி நிலா எழுதும் கதைகளில்,நீங்கள் நினைக்கும் தன்மையுடையதாக முடிவுகள் அமையும் என நானும் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
அப்புறம் வேறு என்ன கலை விஷேசம்..?
எனது கருத்துப் பகுதியில்.நீங்கள் அடிக்கடி “குறுக்கீடு” செய்யத்தான் வேண்டும். விவாதங்கள் எனில்,அது எப்போதும் செழுமையை நோக்கி.என்னையும் செலுத்தும்.நானும் ஏதேனும் கற்றுக் கொள்ள வாய்ப்பளித்ததாக இருக்குமே..? உங்கள் குறுக்கீடுகள் வரவேற்கப்படுகின்றன.
அன்புடன்
பொள்ளாச்சி அபி.
07-May-2014 9:17 pm
ஆனாலும்..ஒரு செடி மரமாவதற்கு முன்பு, காற்றில் அது சாய்ந்துவிடாமலும். வளைவு நெளிவு இன்றி நேராக வளருவதற்க்காகவும், அதன் அருகில் ஒரு கம்பு நட்டு அந்த செடியை அதனோடு பிணைத்து வைப்பார்கள். அதே போல்தான் பிள்ளைகள் என்ற செடி வளர பெற்றோர்கள் துணை கம்பாக இருக்க வேண்டும். ===="இருப்பேன்"====!
============================அருமை !
வணக்கம் அபி சார்....
கருத்துப் பகுதிகளில் நீண்ட நாட்களாய் குறுக்கீடு செய்யாமைக்கு மன்னிக்க வேண்டும் !
அண்ணாவின் கதைக்கு தாங்கள் எழுதிய விமர்சனம் உங்களைப் பாராட்டவே செய்கிறது ! மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள் !
பொதுவாக கவிதை கட்டுரை என்று சகல படைப்புகளுக்கும் கருத்துப் பகுதியில் கருத்தாக எழுத வேண்டியவைகள் இப்படி தான் இருக்க வேண்டும்...ஆனால் கருத்து, விமர்சனம் என்றாலே இங்கு வேறு சமாச்சாரம் ஆகிப் போய்விட்டதால் அதைப் பற்றி பேசிப் பயனில்லை !
சரி....
இந்த கதையின் கருப்பொருள் "வாடகை வீட்டின் நிலையில்லா தன்மை" என்றே எனக்கு தெரிகிறது...அந்த வகையில் எனக்கு கொஞ்சம் கதையில் உறுத்தல் இருக்கிறது....
அதாவது..வாடகை வீடு என்ற தலைப்பும், கருப்பொருளும் பேசப் பட்டதை விட அதிகமாக மரம் குறித்த சம்பவங்களே விவரிக்கப் படுமேயானால் கருப்பொருள் சிதைவு ஏற்பட வாய்ப்புண்டாகலாம் !
இங்கே நாம் ஒரு விடயத்தை நுணுக்கமாக சிந்திக்க வேண்டி இருக்கிறது...
ஈழவேந்தன் ஒரே வீட்டில் இருந்தால் ஒருவேளை அவன் அந்த ஒரு நெல்லி மரத்தை தான் வளர்திருப்பான்...வீடு மாறுதல் அடிக்கடி நடைபெறுவதால் போகின்ற எல்லா வீட்டிலும் அவன் மரம் நடுகிறான்...எனவே மரநடுகை மறைமுகமாக நடந்துக் கொண்டே இருக்கிறது...என்ற விடயத்தைக் கொஞ்சம் அழுத்தமாக கூறி கதையை முடித்தால் நல்லது கெட்டது ரெண்டுமே கொண்ட முடிவாக அமைய வாய்ப்புண்டாகும் அல்லவா ?
எல்லா தீமையிலும் ஒரு நன்மை எல்லா நன்மையிலும் ஒரு தீமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் இது பார்க்கப் படலாம் !
என் எண்ணம் சரி தானா ? இதுகுறித்து தங்களின் கருத்து என்ன சார் ? 07-May-2014 12:09 am
அண்ணா தாங்கள் விமர்ச்சனம் எனக்கு கிடைத்த மகுடம். ''நன்றிகள் அண்ணா''.
எல்லோரும் கதை எழுதுகிறார்கள் நாமும் எழுதி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் அந்த நெல்லிமரத்தைப் போலவே முளைத்துவிட்டது, அதன் விளைவுதான் இந்த படைப்பு. இதற்கு முன் எழுதிய ''புழுதிகாட்டு பொழப்பில்'' நீங்கள் சொன்ன விமர்ச்சனம்தான் என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்றால் அது மிகை ஆகாது அண்ணா.
இந்த படைப்பிற்கு நீங்கள் சொன்ன விமர்சனம் என்னாலும் எழுத முடியும் என்ற எண்ணத்தை எனக்கு தந்துவிட்டது. நடுமையான நிலையில் நின்று நிறைகளையும் குறைகளையும் தராசில் நிறுத்தி இருக்கிறீர்கள், நிறைகள் அதிகமோ குறைகள் அதிகமோ... ஆனால் குறைகளை நான் ஆழமாக ஆராய்ந்து இனி வரும் படைப்புகளில் இந்த குறைகள் இல்லாமல் போக இன்னும் கடுமையாக சிந்தனையை சீர் செய்வேன் என்று கூறிக்கொள்கிறேன்.
நல்லவேளை அண்ணா வெறும் பாராட்டை மட்டும் சொல்லிவிட்டுப்போய் இருந்தீர்கள் என்றால், நான் ஏமாற்றப்பட்டு இருப்பேன், நான் நல்லாத்தான் எழுதுகிறேன் என்ற கர்வமும் தன்னிறைவும் வந்துவிட்டால். அது எனது வளர்ச்சியை முற்றிலும் முடக்கிவிடும் அல்லவா...?.. பிறகு திறமை மிக்கவர்களின் சபையில் மூக்குடைந்துவிட்டால் வலிக்கும்தானே. அப்படி ஒரு நிலைமை வராமல் இருக்க வேண்டுமெனில் தற்பொழுதைய விமர்சன உளிகளின் தாக்குதல்களுக்கு தன்னை முழுமையாக அர்பணிக்க வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமில்லை விமர்சனத்தில் குறைகள் சுட்டிகாட்டப்படவேண்டியது மிக அவசியமான ஒன்று மட்டுமல்ல, அதுதான் விமர்ச்சனத்தின் முறையான இலக்கணமும்கூட.
''விமர்ச்சனம் பலருக்கும் வலிக்கும் ஆனால் அதுதான் சிந்தனையை செதுக்கும்.''
இந்த விமர்ச்சனம், படைப்பை முற்றிலும் ஆராய்ந்து செய்யப்பட்டு இருக்கிறது என்பதை தெளிவாக உணரமுடிகிறது, இப்படி ஒரு விமர்ச்சனம் கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். அதுமட்டுமில்லை இதுவரை இப்படி ஒரு நடுநிலையான விமர்ச்சனம் இந்த தளத்தில் இதுவரை எவர் படைப்பிற்கும் கிடைத்து இருக்காது என்றே எனது நான்காண்டு அனுபவத்தில் கூறுகிறேன், அந்த வகையில் நான் ஒரு பாக்கியசாலி என்பதில் பெருமையடைகிறேன்.
தாங்களின் விமர்ச்சனத்தை நான் முழுமனதாய் ஏற்கிறேன் அண்ணா, இனிவரும் படைப்புகளில் தாங்கள் சுட்டிகாட்டிய பிழைகளை நீக்கி, வாசகர்கள் திருப்தி அடைகிற வகையில் எழுதுகிறேன் அண்ணா. சிறந்த சிறுகதை எழுத்தாளரான தாங்களின் கருத்துக்கள் எனது அடுத்தக்கட்ட நகர்விற்கு வழிகாட்டும் என்பதில் சந்தேகமில்லை, உண்மையிலேயே இந்த விமர்சனம்தான் என்னையும் எழுத்தாளனாக எனக்கே காட்டுகிறது.
கதையின் முடிவு எப்படி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று தாங்கள் கூறிய விடயம், மனிதில் இருக்கிறது அண்ணா... இன்னும் கூட மாற்றியமைக்க நான் முயற்ச்சிப்பேன்.
மிக்க நன்றிகள் அண்ணா. 06-May-2014 3:49 pm
ஜன்னல் -போர்சுகிசியமாம்
காலதர் -நல்ல தமிழ் வார்த்தை நான் எங்கோ படிச்ச நியாபகம் ...
காண்பதற்கு அழகு
கரடுமுரடான தூரத்து கிரகம்
==காலதர் சிறையில் நிலவு.
நல்லா இருக்கு இல்லை ............ 06-Mar-2014 3:01 pm
நெடிலடி கவிதைகள் எனும் தலைப்பில்
நானும் ஒரு கவியை பதிவிட்டுள்ளேன் .
அதை உங்கள் கவிதான் ஞாபகப் படுத்தியது .
நைல்நதி போல்
நீளமானது
அவள் கூந்தலும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*****************************************
(( உதாரணமாக மேலுள்ள கவிதையை
அவள் கூந்தலும்
நீளமானது
நைல்நதி போல்
என்று மாற்றிப் படித்தாலும் அதே பொருளையே இக்கவி தரும் .))
நீண்டிருக்கும் நைல்நதி
கறுத்திருக்கும் கார்மேகம்
==காதலிக் கூந்தல்.
மேற்படி உங்கள் கவிதையும் நன்றாகவே ஒத்துப் போகிறது .
என்ன ஒரு அருமை வித்தியாசமான கற்பனை அழகு அழகு .
நன்றிகள் அய்யா . 04-Mar-2014 6:41 pm
தாங்களின் அன்பான ஆதரவோடு பொங்கல்விழா கவிதைபோட்டி சிறப்பாக நடந்து முடிந்ததில் மிகுந்த சந்தோசம் அடைகிறோம்...!
இந்த கவிதை போட்டியின் நோக்கம் உங்களை எழுத தூண்டும் உந்து சக்தியாக இருப்பதும், சிறப்பான படைப்பாளிகளை அனைவருக்கும் அறிமுகம் செய்வதுமே ஆகும், அப்போ நாங்கள் எல்லாம் சிறப்பான படைப்பாளிகள் இல்லையா என்று யாரும் கேட்க வேண்டாம், ஏனென்றால் உங்களுக்கான அரங்கேற்றங்கள் உங்களுக்காகவே காத்துகொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை, களத்தில் நீங்கள் அனைவரும் நின்றீர்கள், உங்களில் சிலர் முன்னே வருகிறார்கள், நீங்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறீர்கள் உங்கள் இலக்கை நோக்கி,- நிச்ச
பொங்கல் திருவிழா கவிதை போட்டி
===============================
தோழமை நெஞ்சங்களே வணக்கம்...!
2012 ஆம் வருடம் புரட்சியாளர் சே குவேர பிறந்த தினத்தை முன்னிட்டு நமது தளத்தில் கவிதைபோட்டி போட்டி நடத்தி சிறப்பான படைப்பாளிகள் பலருக்கும் பண பரிசுகள் வழங்கி, அவர்களை கௌரவித்து மகிழ்ந்தோம்.
அதன் பிறகு 2013 கடந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டி நடத்தி, சிறப்பான படைப்பாளிகளை கௌரவித்து பரிசும் பட்டயமும் வழங்கினோம்.
அந்த வகையில் இது இரண்டாம் ஆண்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டிக்கான அறிவிப்பு.
அறிவிப்பு;
12 கோடி மக்கள் தொகையோடு உலகெங்கும் பறந்து விரிந்து கிட
பரிசு பெற்றவர்களுக்கும் பரிசுக்குரிய படைப்புகளை தேர்வு செய்தவர்களுக்கும் முன் நின்று நடத்தியவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 14-Feb-2014 11:47 am