கடன்களே... கடந்துப்போ.....
நிலை தடுமாறிப்போனது
சொந்த தொழில்...
தன்மான வேந்தன் உணர்வில்
கவலைகள் கவலைக்கிடமானது
மனம் கொதிநீரில் சாகிறது
பண பற்றாக்குறையில்
குணம் கூனிகுறுகிவிட்டது
அவரச நிலை பிரகடனத்தில்
கந்து வட்டிக்காரன் கடனாக
வந்து கொடுத்து காப்பாற்றினான்
அன்றே அவஸ்தைகள் தொடங்கிவிட்டன
ஆர்ப்பரித்து இவனை சூழ்ந்துவிட்டன.
வட்டி ஏறுவதைப்போல
ரத்த அழுத்தம் எகிறுகிறது
தலைமறைவாக ஒளிந்துக்கொண்ட
இருதயவலிகள் எக்காளமிடுகிறது.
“நான் இல்லையென்று
போய் பொய் சொல்.. ”
அதிகார ஆணையிடுகிறான்
அலுவலக ஊழியனிடம்.......
வட்டிக்காரன் அவன் வாசலில்...
திருடனைப்போல இவன் அலுவலகத்தினுள்..
அவமான விருதுகள் ஏராளம்
பெற்ற இந்த பெருமைகளை
பெற்றோருக்கும் சொல்லவில்லை
மற்றோருக்கும் சொல்லவில்லை
கதிகலங்கி நிற்கிறான்
கதியென்ன ? பதறுகிறான்.
பித்தன் இவனுக்கு
நண்பனிடமிருந்து
இலவச உதவி வார்த்தைகள்
”பதறிய காரியம் சிதறும்”
பதறாமல் சிதறாமல்
நேரமின்றி உணவின்றி
உழைக்கின்றான்...
தவறவிடும் சில வினாடிகளும்
தவறாமல் எச்சரிக்கிறது..
“கவனம்.. கவனம்.. கவனம்..”
“வட்டி.. வட்டி.. வட்டி..”