பூத உடல்
மண்டையப் போட்டா மனுஷன்
ஒத்த ரூவா காசு
அதையும் எடுத்துட்டா அவன்
செல்லாக் காசு
அது தெரிஞ்சும் அடங்காம
அடம் பிடிக்குறான்
அகந்தையில் தான் என்று
அலறித் திரியிறான்...
சிற்றிம்ப விஷத்தால் என்றோ
செத்து - அவன்
சிரித்தே அலைகிறான் உடல்
பருத்து கொழுத்து...!