சமத்துவ சங்கமம்

அழுகை முடிந்தால் சிரிப்பு
அதுவே வாழ்வின் சிறப்பு

இனிப்பு இறந்தால் கசப்பு
இதை அறிந்தால் உனக்கு மதிப்பு....!

நிலையில்லாத உலகமடா இதில்
நீயும் நானும் தூசுகளடா...!!

எதற்கு மாயக் கொம்புகள் மண்டையில்
என்றும் தானே பெரிதென்று மோத...?

மனிதம் என்ற சமுத்திரம் உண்டு அதை
மதித்தே நாமும் சங்கமிப்போம் இன்றே...!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (15-Oct-13, 4:04 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 55

மேலே