கவிஞனின் இதயம்
முன் வந்த முடி நீ
இன்னும் நரைக்கவில்லை !
பின் வந்த தாடி நான்
பின்னும் நரைத்துவிட்டேன் !
என்றது வெள்ளைத் தாடி
கரிய தலை முடியைப் பார்த்து ..
எங்கோ யாரோ
மெல்ல சிரிக்கும் ஒலி
கேட்டது !
நரையும் திரையும்
எனக்கில்லை
எனெக்கென்றும்
இளமைதான் என்று
உள்ளேயிருந்து சொன்னது
கவிஞனின் இதயம் !
~~~கல்பனா பாரதி~~~