தியாகத்திருநாள்

இறைவன் ஆணையை இனிதே ஏற்று
இப்ராஹிம் (அலை) செய்த தியாகம்

அருமை மகன் இஸ்மாயில் அறுத்து
பழி இட இறை கனவு அதுவென்று

அன்னை ஹாஜிராவிடம் தெரிவிக்க
தாயும் மறுப்பு சொல்லா மனம் கொண்டு

மகனை அழைத்து கொண்டு அந்த
மலை பிரதேசம் நோக்கி நடந்தார்

முக குப்பற படுக்க செய்து -அறுக்க
கூர் முனை கத்தி கொண்டு ஓங்க

இறைவன் ஆணை இன்றி கத்தியும்
அறுக்க மறுத்த நிலை அங்கே

வானவர் தலைவர் தோன்றி அங்கே
சொர்கத்தின் ஆட்டை இறக்கி வைத்தார்

இந்த தியாகத்தின் அடிப்படையாய்
வந்தது தியாகத் பெருநாள் இன்று

வாழ்த்துக்களுடன் ...........
ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : -ஸ்ரீவை.காதர்- (16-Oct-13, 11:03 am)
பார்வை : 210

மேலே