வானில் வலம் வருவோம்!-(அஹமது அலி)

பூமியின் கண்களுக்கு
நட்சத்திரக் கூட்டம் சிறிது
வானின் கண்களுக்கு
நட்சத்திரம் பெரிது!
சூரியனும் ஒர் நட்சத்திரமே!
(***)
ஒற்றைச் சூரியன் நாமறிவோம்
இரட்டைச் சூரியனும் உண்டென்றால்
உண்மையென நம்புவோமா?
நம்புவோம் இனிமேல்
இரட்டைச் சூரியனும் உண்டு
( kepler 47 )
(***)
ஒற்றைச் சந்திரனை
ஓயாது கண்டு ரசித்து
சலித்து விட்டதா?
செவ்வாயில்
இரண்டு சந்திரன்கள் உண்டாம்
ரசனை கூட்டுவோம் இனி..
(***)
சந்திரனின் ஒளி
சுய ஒளி இல்லை
சூரியனின் இரவல் ஒளியே
சந்திரனுக்கு பிரகாசம்
சந்திரன் ஒரு பிரதிபலிப்பான்
(***)
நாட்களில்
செவ்வாய்க்கும் வியாழனுக்கும்
புதன் பக்கம்
வானிலோ
ஞாயிறுக்கு தான்
புதன் பக்கம்
(***)
வெப்பமென்றால்
கடும் வெப்பம் (427 டிகிரி)
குளிரென்றால்
கடும் குளிர் (-173 டிகிரி)
(***)
அரை நாள் பகல்
அரை நாள் இரவு நமக்கு
புதனில்
மூன்று மாதம் பகல்
மூன்று மாதம் இரவு
(***)
நூற்றி நாற்பது பூமியை
உள்ளே வைத்து அடைக்க
வாய் பிளக்குமாம்
கோள்களில் பெரிது வியாழன்
(***)
வெள்ளியும் மின்னினாலும்
சுய ஒளி இதற்கும் கிடையாது
சுற்றிய மேகங்களின்
ஒளிரும் தன்மையே
ஒளி கூட்டி ஒளிர்கின்றன!
(***)
பூமியைச் சுற்றுவதில்
மெதுவாக செயல்படுவது சனி
மேனியைச் சுற்றிலும்
பனி உருண்டைகளை கொண்டு
சனி தரும் காட்சி அழகு
(***)

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (16-Oct-13, 8:39 am)
பார்வை : 589

மேலே