நாகரிகம்..........
நாகரிகம் எங்கே நசுங்கி விட்டதோ!
பழந்தமிழரின் பண்பாடு எங்கே!
பணம் எனும் புதைகுழியில் புதைந்து விட்டதோ!
ஆடை நாகரிகம் அரைகுரையில் தான் -உண்டோ!
கல்லூரி பெண்களால் காணாமல்-போனதோ!!
இங்கிதம் தெரியாத இளைஞர்களால்
இழிந்து போனதோ!!!
எங்கேயடா என் தமிழ் !
ஆங்கில மோகத்தினாரால்
அடிமையக்க பட்டு விட்டதோ!
கலப்பினரால் காணாமல் போய்விடுமோ!
இளைஞர்களின் அறியாமையால்
அழிந்து போய்விடுமோ!!

