நீலமேக கூந்தல் -என்னவள்

உன் இடை விடை கொடுக்கும் - கடந்து
செல்லும் உன் கூந்தலுக்கு ,தடை ஒன்றும்
இல்லை பூக்களுக்கும் உன் கூந்தலில் இடம்
-பெற

பூக்களும் உன் கூந்தலை தேடி வந்தது ஏன் ?
மணம் பிடிக்கவா ?மனம் முடிக்கவா ?
நயாகரா நீர்விழ்ச்சியை கருமையாக கண்டது
உன் கூந்தலில் தான் !

கனம் கொண்ட உன் கூந்தலை கண்ட காற்றும்
சினம் கொண்டது எடை போட முடியாமல்
நான் கண்ட கார்மேகம் தான் உன் கூந்தலா ?
அந்த கார்மேகம் கண்ட மழை தான் உன் குளியலா

உன் தலைமுடி வாரும் சீப்புக்கும் இன்று வரை
வழி தெரியாத பாதையாக தான் இருக்கிறது .

நீ நடந்து சென்ற இடங்களில் ஏன் இந்த சிலிர்ப்பு ?
இந்த பூமி உன் கூந்தலை
தொட்டதால் வந்த ஈர்ப்பா? புவி ஈர்ப்பா ?
உன் கூந்தல் செய்த சதியா?
நியூட்டன் கண்ட விதியா ? (சொல்)

எழுதியவர் : sathishkavithai (16-Oct-13, 9:20 pm)
சேர்த்தது : sathishkavithai
பார்வை : 119

மேலே