காதல் சொல்ல
நான் சொல்வதெல்லாம் சென்று சேரனுமே
காதல் மங்கை அவள் நெஞ்சு கூட்டுக்குள்ளே
நேரில் சொல்ல வேண்டி நான் அருஅருகே நின்று
பேசியும் என் மன ஓசை அவள் கேட்கலையே
காலை நேர புல்வெளி மீது தூங்கும் பனித்துளி
தூது சொல்ல போகையில் ஆவியாய் போனதே
மாலை நேர சூரியன் வேகமாக மறையுதே
போகும் வேகம் பார்கையில் தூதுசொல்ல ஏலுமோ
வானுலாவும் கருமேகங்கள் ஆவலாக சேர்ந்துதான்
தூதுபோகும் பாதையில் மழைகாற்றடித்து கலையுதே
காதல் சொல்ல வீரமும் தேவை என்று ஆனதால்
என் கோழை காதல் உன்னிடம் வார்த்தையற்று போனதே
நான் விட்ட வார்த்தைகள் நீ சொல்லிவிட்டபின்
ஜீவன் பெற்ற நம் காதல் சிறகடித்து பறக்குதே