விரைந்து வா
அன்பாய் இருந்தாய்
ஆறுதல் சொன்னாய்
இன்று ஏனோ உனையே காணவும் இல்லை
ஈரமாயின விழிகள்
உறக்கம் தொலைத்தேன்
ஊனும் வெறுத்தேன்
எண்ணம் எல்லாம் நீயே
ஏக்கமுடனே கணமும்
ஐம்புலன் பணியை மறுக்க
ஒப்பிலா மணியே
ஓயாமல் உன் நினைவே அலையாய்
ஓளடதமாக வருவாய் கண்ணே கடிதாய்
அஃது ஒன்றே வழி உயிர்க்க நானும் அன்பே