உயிரே உறவே
மே மாதம்
வீசும் மா வாசம்
நா ஊறும்
சுவைத்து களித்தாடும்
நெஞ்சில் பூவாசம்
என்றும் நீ வாசம்
நெஞ்சில் தேன் ஊறும்
அன்பால் கவி பாடும்
.
முக்கனியின் கூட்டணியே
உயிர்க்கூட்டின் ஊருணியே
மனம் வீசும் நறுமுகையே
கணை வீசும் விழியாளே
கவி பேசும் தேன்மொழியாளே
தமிழ்பாடும் பைங்கிளியே
வலை வீசும் குறமகளே
புள்ளி மான் தோற்றதடி
துள்ளி நீ ஓடுகையிலே
அன்னம் நடை மறந்ததடி
உன் எழில் நடை பார்த்ததுமே
சொர்ணம் ஒளி இழந்ததே
உந்தன் மேனி ஒளி கண்டதுமே
பால்மதியும் தோற்றதடி
எழில் வதனம் கண்டதுமே
காணும் உயிர் அனைத்துமே
நிலை மறந்து இருந்ததே
எனை கண்ட கணத்திலே
சிறை எடுத்தாய் என்னையும்
தந்து விட்டாய் தண்டனை
உனை சுமக்க நெஞ்சிலே
ஆயுள் முழுதும் அன்பிலே
ஏற்று விட்ட நானுமே
சுகமாய் இருந்தேன் நாளுமே