மழலை
தத்தி தவழும் உன்
அசைவு
தளர்ந்த உள்ளத்துக்கும்
சேர்க்கும் மகிழ்வு
உன்னை காண துடிக்க
வெயக்கும் உன் அழுகை
மனதில் பெருக்க வெயக்கும்
கண்ணீர் கலந்த உவகை
புன்னகை பூக்கும்
உன் அழகுக்கு ஈடு இணை இல்லை
அந்த முகத்தில் பிரகாசிக்கும் ஒளியை விட
தங்கம் பெரிதில்லை
இறைவன் பரிசு
நீ இந்த உலகிற்கு வந்தது
மழலை உன் முகத்தை காணும் என் கண்களுக்கு
இன்பம் தந்தது !! அதனால் இந்த சிறு கவிதை பிறந்தது !!