மாட்டுப்பெண்

காலை எழுந்ததில் இருந்து
துடைப்பது துவைப்பதில் ஆரம்பித்து
பல வேலை செய்கிறேன்...

வயிற்றில் குழந்தையுடன்
வந்திருக்கும் நாத்தனாருக்கு
வாய்க்கு ருசியாக...

மாமன் மாமிக்கோ
உப்பு புளிப்பு இல்லாமல்...

கொழுந்தனுக்கோ
வறுவலும் பொரியலும்...

பிள்ளைகளுக்கோ
இனிப்பும் காரமும்...

அத்தனையும் முடித்து
பாதம் வலிப்பது கூட தெரியாமல்
உறங்கித்தான் போகிறேன்...

நாளை காலை என்ன செய்வது
என்ற கேள்வியுடன்...

ஆனாலும் தன் மகள்
செய்வது அனைத்தும் சரி
மரு மகள் செய்வது அனைத்தும்
தவறு என்பது மட்டும் ஏனோ...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (18-Oct-13, 7:15 pm)
பார்வை : 1358

மேலே