உருகுகிறாள் பூமித்தாய்..!

வளி மண்டல காற்று
மாசுக்கொடுமையில் சீரழிக்கபடுகிறது
ஓசோன் திரை
கொடூரமாக கிழிக்கப்படுகிறது...
வெப்பத்தின் ஆட்சியில்
உலகம் அடிமைப்படுகிறது

வெப்ப தணலில்
மண்ணும் மரமும்
காய்ச்சப்படுகிறது
படுபாவி மனித இனங்கள்
அறிவியல் ஆற்றலில்
ஆட்டம்போடுகிறது
நாளைய தலைமுறைகளுக்கு
இன்றே சவக்குழி
தோண்டப்படுகிறது..

நிலக்கரியும் கச்சா எண்ணெய்யும்
மண்ணிலிருந்து சுரண்டப்படுகிறது
அது கார்பன் டையாக்சைடு,மீத்தேன்
வாயுக்களுடன் கூடல் கொள்கிறது
உடனடி கருவுறுத்தலில்
வெப்ப அரக்கனை பெற்றெடுக்கிறது
அந்த அரக்கனின் பிடியில்
சுற்றச்சூழல் கன்னி மாசுப்படுகிறது
மாசுப்பட்ட துயரத்தில்
பூமி தள்ளாடி சுற்றுகிறது..
வெப்ப மயமாக்கலில்
பூமித்தாய் உருகிக்கொண்டே
கதறுகிறாள்.............!

---------------------------------
மனித இனமே !!
பூமி தாய் அறிவுறுத்துகிறாள்.
செவி கொடுத்து கேள் !

மனித குழந்தையே !
நீ உல்லாசமாக வாழ
நான் ஓயாமல் உழைக்கின்றேன்.
செல்லமே ! என் மீது
ஏனடா இந்த
வெப்ப வெறுப்பு?

மின்சாரம் வேண்டுமா?
சூரிய சக்தியை பயன்படுத்து.
அணு உலை எதற்கு ?

தேவைக்குமட்டும் வாகனம் ஒட்டு
கொஞ்சம் பெட்ரோலை சிக்கனப்படுத்து.

மரங்களை வளர்த்துக்கொள்
மழையை தேடிக்கொள்.

விவசாயத்தை செழமைப்படுத்து.
பயிர் மேலாண்மை மேம்படுத்து.
பசுமை புரட்சியை அமல்படுத்து.

கால்நடைகளை வளர்த்து..
உன் சமையல் எரிவாயுவாக
எருது சாணத்தை பயன்படுத்து.

காற்றை தூய்மைப்படுத்து
ஓசோனை காப்பாற்று..

நான் வாழவேண்டும்
நான் வாழ்ந்தால்தானே
நீ வாழ முடியும்.........!
செல்லமே ! எனை காப்பாற்று !!


------------------------------------>இரா. சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (18-Oct-13, 7:02 pm)
பார்வை : 1444

மேலே