பேசப்படாத வார்த்தைகள்!

எங்கே செல்பேசிக்கு
கேட்டுவிடப்போகிறதோவென்று
நீ இரகசியமாக பேசியவை
என் மனதிற்கு கேட்டுவிட்டது அன்பே!
பேசிய பத்திகளின்
சுகங்களைவிட
பேசப்படாத வார்த்தைகளின்
சுகம் தனிதான்! என் அன்பே!
நீ பேசாமல் பேசு!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (19-Oct-13, 10:38 am)
பார்வை : 418

மேலே