ஏகாந்தம் ..

தொல்லைதரும் தனிமைகளும்
தொடர்ந்து ஊக்குவிக்கின்றன ..
தூக்கமில்லா இரவுகளின் பலனையும்
தொலைத்த அமைதியையும்
மீட்டுத்தரும் இடர்கொண்ட
நெருஞ்சிப் பாதையின்
இலவம்பஞ்சு காலடிச் சுவடுகளாய்
உன் லட்சியப் பயணங்கள்
தொடர தனியாக அல்ல ,
தனிமையின் தன்னம்பிக்கை
துணையாக என்றும் வரும் ..
ஏகாந்தத்திலும் ஓர் ஏணிப் படியாய் !..

எழுதியவர் : கார்த்திகா Ak (21-Oct-13, 6:14 pm)
Tanglish : yeekaantham
பார்வை : 141

மேலே