இயற்கையின் ஒப்பந்தம் ...

காதலை மட்டுமே
சுமக்கும் ரோஜாவை
அணைத்து நிற்க்கும்
கொண்டை ஊசி ,
கசங்காத பச்சை நிற
தாவணி,
எப்போதுமே நம்மை
முத்தமிடும் வாசனையற்ற
முக பூச்சு ,
ஆனந்தத்தில் வடிக்கபடும்
நீர்,
இப்படி பிறந்த
ஊட்டி மலையில்,
வண்டியின் நிறுத்த கருவியில்
பதிந்து கிடக்கிறது
அங்கு
பயணிக்கும் மனிதனின்
ஓட்டம் ...