வெங்காயம்
வெங்காயம் உரிக்கையிலே
கண்ணுல நீர் பூத்தது போயி
வெங்காய விலை கேட்டாலே
கண்ணு கலங்குதுங்க
வயிறு கொதிக்குதுங்க...
அன்னாடம் அரிசி உலை வெக்க
காக்காசு இல்லையேன்னு
அன்னாடன்காட்சிகளாய் நாமிருக்க
பழைய சோத்து கஞ்சியோட
தொட்டுக்க பச்ச வெங்காயம்..
அதுக்கும் வழி இல்லாம
பதுக்கி வெச்சு விலை ஏத்தி
படுபாவி பயலுக
பாதகம் பண்ணி புட்டாங்க..
வெறுமைக்கு வயித்த விட்டு
வறுமைக்கு வாக்கப்பட்டு
தெனம் தெனம் போராட முடியலங்க
இந்த பாழாப் போன நாட்டுல.
விதைச்சவனும் பொழைக்க வழி இல்ல
உழச்சவனும் வாங்க கதி இல்ல
வக்கத்து போயி நிக்குறோம்
திக்கு தெரியாம தவிக்குறோம்...
அன்னாடம் கும்பிடும் எங்க வூட்டு குல சாமிகளா
நாங்க கும்புட்ட நீயும் கைவிட்டுட்ட.
ஓட்டுக்காக எங்கள கும்புட்ட
அவுங்களும் கைவிட்டுடாங்க..
ஆனா இந்த வறுமை மட்டும்
எங்கள விட்டு போகலையே ..
தெனம் தெனம் காவயித்து கஞ்சிக்கு
செத்து செத்து பொழைக்கும்
எங்கள போல ஏழைக்கு
என்னைக்கும் கூடவே இருக்குறது
ஒட்டோ உறவோ இல்ல
கண்ணுல கண்ணீரும் வயித்துல பசியும் தான் ..
அதப் போக்க எந்தச் சாமி வருவானோ
என்னிக்கு வருவானோ ..................
--------மு.ஓம்குமார்

