மழை

வானம் கண்ணடித்து
காற்று சைட்டடிக்க
காதல் வைபோகம் ...

மேகம் பன்னீர் சிந்தி
மரங்கலெல்லாம்
தலையசைத்து பூத்தூவ
பீப் பீ ஊதி
மேளம் கொட்டி கல்யாணம்

மூன்றாம்பிறை இரவின்
நான்காம் சாமத்து புலர் பொழுதில்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
விழாக்கோலம் !

எழுதியவர் : - பிரகாசக்கவி - (23-Oct-13, 4:53 pm)
Tanglish : mazhai
பார்வை : 364

மேலே