போட்டுத் தாக்க…
போட்டுத் தாக்க……
மருமகள் : மாமி இந்த சாமாங்கள் எல்லாம் இப்ப நீங்க பாவிக்கிரதில்ல தான….தூக்கி வீசிடவா..
மாமியார் : எடுத்தி ஒரு பக்கமா வெய் வந்து பாத்திட்டு பெறகு வீசறத்த பாக்கலாம்……
மருமகள் : ஆட்டுக்கல்ல பக்கத்தல்ல வெச்சிகிட்டு பிலெண்டர கொரகூற்ற ஒரு ஆளுன்னா அது
நீங்கவதான் இருக்க முடியும்….
மாமியார் : ஆட்டுக் கல்லோட சேவ எட்டு தலமொரய தாண்டிடுச்சி பிலெண்டர ஒரு மணி நேரம் ஓட
விட்டு பாரு அதோட லட்சணம் தெரியும் !
மருமகள் : ஓல்டானாலும் மாமி நல்லா போட்டு தாக்கரீங்க !
மாமியார் : நீயும் கத்துக்கோ யெங்கிட்ட ! நாளிக்கி நீயும் மாமியாராக ரெடி ஆவினும்ல போட்டுத்
தாக்க….