ஓர் அபலையின் கண்ணீர் கதை
என் கண்ணீர் கடல் போல
--கரைந்தோடும் நேரமிது...
உதிரத்தில் உயிர் கசியும்
--விதி போடும் கோலமிது...
சேயாக பிறக்கையிலே
--பெண்ணாக படைத்துவிட்டாய்..
தாயாக்கி பார்க்காமலே
--பாவியாக்கி அழவைத்தாய்..
பேர் சொல்ல ஒரு பிள்ளை
--பெற்றெடுக்க வழியில்லை..
ஊர் வாயை மூடி விட
--நான் தாயும் ஆகவில்லை..
உறவுகள் மதிக்க வில்லை
--உடமைகள் கிடைக்க வில்லை..
கனவுகள் பழிக்க வில்லை
--கடைசிவரை எனக்கு யாருமில்லை..
பெண் என்றால் பாதி
--தாய் தானே அதன் மீதி..
இதுதானே உலகத்தின் நியதி-பின்
--எனக்கு மட்டும் ஏனிந்த நீதி..
பிள்ளை இல்லா பெருந்துயரம்
--யாருக்கும் இனி வேண்டாம்..
நான் கேட்ட நஞ்சொற்கள்
--யார் செவிக்கும் விழ வேண்டாம்..
விதி சொன்ன கதை எல்லாம்
--மதி வெல்லும் நாள் உண்டு..
அது போல என் விதியும்
--புது மாற்றம் ஆகிடுமா?..
எனக்கென்று ஒரு பிள்ளை
--எழுதி விடு இறைவா நீ
எது கேட்டால் நான் தருவேன்..
--என் உயிர் கேட்டால் அது தருவேன்..
நிலவுக்குள் நான் சென்று
--ஒரு நொடி நிற்கட்டுமா???..
கருவுக்குள் ஒரு சூழ்
--கண்டு விட்ட தாய் போல...