யாவும் நீ தான் பெண்ணே
நட்புடனே வந்தேன் தோழமையை தந்தாய்!
ஏனென யோசித்தேன் எண்ணம் யாவும் நிறைந்தாய்!
எண்ணங்களில் முப்பொழுதும் நீ என்றேன் காதலைத் தந்தாய்!
தூக்கம் என சொன்னேன் என் கனவுகளை நிறைத்தாய்!
இன்பம் என குதித்தேன் மகிழ்ச்சியில் நீயும் சிரித்தாய்!
துன்பம் என நின்றேன் அன்னை அவள் ஆனாய்!
உன்னை பிரிந்து தவித்தேன் வலிகள் பல தந்தாய்!
வலிகள் எதற்க்கு என்றேன், ஆம் வலிகள் எதற்க்கு
வைத்துக்கொள் இனிமேல் உன் கவிதை நான் என்றாய்!!!!!!!!!!