நிலாச்சோறு
இன்றைய இரவுகளில்
வான்நிலவும் பசியெடுத்து
பட்டினியாய் கிடகிறது !
சோறு பிசைந்தெடுத்து
கவளம் கவளமாய்
அள்ளி அள்ளி ஊட்டிவிடுகிறேன்
என்னை போலவே நிலவும்
ஒப்பாரிவைத்தழுகிறது
அம்மா நீ ஊட்டியசோற்றின்
அன்பெனும் அட்சய பாத்திரம் இன்றி!

