நல்லவளே நல்ல வேலை

நல்லவளே !

நல்ல வேலை ,

நடைபோடும் நந்தவனம் நீ
நான்கு பேர் குழுமும் இடங்களில்
நைட்டி அணிந்தவளாய் நடந்திடவில்லை
நடந்திருந்தால் .......

கொள்ளை எழில் கொண்டவர்களாய்
வெள்ளை உடை அணிந்த தேவதைகளாய்
உலவிடும் வெள்ளை தேவதைகள்
தம் சீருடையினை,வேருடையாய் மாற்றிட
நச்சரித்து தொல்லை புரிந்திருப்பர் நல்லவர் இயேசுவை .

சேலை, சுடி, சல்வார் அணிவோரெல்லாம்
நாணத்தில் நானியிருப்பர், நாணத்தினால்
தம் முகமும் மனமும் கோனியிருப்பர்
..

நாணி நாணியே நாளைடைவினில்
சேலை , சுடி, சல்வார் அணிந்திடும் நாகரீகமே
நலிந்து நலிந்து நைந்தே போயிருக்கும் ...

நைட்டி அணிந்தவளாய் நடந்திடவில்லை
நடந்திருந்தால் .......

எழுதியவர் : (26-Oct-13, 6:36 pm)
பார்வை : 132

மேலே