அப்பா மகன்

ஈர் ஐந்து மாதங்கள் சுமந்து உன்னை அவள் ஈன்றெடுக்க...
ஒரைந்தாயிரம் மைல்கல் கடந்து உன்னை நான் ஏந்தவந்தேன்...

கருவறையில் சுமந்த அவள் மார்பறையில் தான்கும் முன்னே...
இருகையேந்தி உன்னை என் நெஞ்சறையில் தாங்கிவிட்டேன்...

அவள் உன்னை ஈன்றேடுத்து மறு ஜென்மம் கொண்டாள்...
நான் உன்னை சுமந்ததினால் மறு வாழ்வு கொண்டேன்...

தொட்டிலிலே நீ சிறு குழந்தை மறுகட்டிலிலே அவள் ஓர் குழந்தை...
நான் எக்குழந்தை தழுவிடுவேன் என் ஆனந்தத்தை பகிர்ந்து கொள்ள...

அவள் என் நெற்றியில் இட்ட முதல் முத்தமும் மறந்ததுவேன்?...
நான் உன் நெற்றியில் என் முதல் முத்தம் பதித்திடவே...

உன் பிஞ்சுக்கால் கொண்டு என் நெஞ்சில் உதைத்து விட்டாய்...
அப்பஞ்சி மெத்தை இனி வேண்டாம் என் நெஞ்சினிலே உறங்கிடுவாய்...

உன்னை பிறந்து பலதொலைவில் மீண்டும் வந்து விட்டேன்....
துடித்ததில்லை இதுபோன்று உன் தாயை பிரிந்த பொது...

துடிக்கிறதே என உள்ளம் உன்னை என் நெச்சில் சுமந்து தாலாட்ட...
விரைந்துடுவேன் உன்னை சுமந்திடவே என் தோள்களிலே...
-என்றும் அன்புடன் ஸ்ரீ-

எழுதியவர் : என்றும் அன்புடன் ஸ்ரீ (27-Oct-13, 5:32 pm)
Tanglish : appa magan
பார்வை : 12657

மேலே