வேறு வழி சிந்திப்பீர்

வேசி போலே போதையோ
காசை யெல்லாம் பறிக்குது.
கடனாளி ஆக்குது.
உறவுகளை அழிக்குது.
வேண்டாம் அந்தக் குடிப்பழக்கம்
விட்டு விடு தோழனே

தாய்க்குலத்தின் வேதனை
தமிழரசு யோசிப்பீர்..
ஒழித்திடுங்கள் மதுவினை
உளமாற வாழ்த்துவர்
வளர்சசிப் பணி நிதிகாண
வழி வேறு சிந்திப்பீர்.

குடிகாரப் பாவிகளால்
குடும்பங்கள் வாடுது.
விடியலைப் பாராமல்
வேரோடு மடியுது.
ஒழித்திடுங்கள மதுவினை
உளமாற வாழ்த்துவர்..


கொ.பெ.பி.அய்யா

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (27-Oct-13, 5:09 pm)
பார்வை : 178

மேலே