தேடலே முடிவிலி,,,,,,,,,

விதிகளெல்லாம் ஒன்றுகூடி
தோற்கடிக்கும் போது,
வாழ்க்கையில் உதிர்ந்த
இலைகளைப்பற்றி
வார்த்தைகளால் வர்ணிக்கமுடிவதில்லை.

எதைகேட்டும் பிறக்கவில்லை
பிறந்த பின், பிறர் தொடுக்கும்
கேள்விகளுக்கு பதிலுமில்லை.

யார் வேண்டினாலும்
மரணம் எனை விடுவதுமில்லை,
யார் வேண்டாவிட்டாலும்
மரணம் எனை நேசிப்பதுமில்லை.

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (27-Oct-13, 11:44 pm)
பார்வை : 109

மேலே