பக்கத்து வீட்டுல சின்ன பிரச்சினை

பக்கத்து வீட்டுல சின்ன பிரச்சினை.
********************************************************
கணவன் மனைவிக்குள் நடந்த சண்டையில், மனைவி கோபித்துக் கொண்டு எங்கோ சென்றுவிட்டாள்.

15 நாள் ஆகியும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை....

இன்று காலையில் தினசரியைப் பிரித்தால்,

காணாமல் போன பெண்ணைப் பற்றிய விபரங்களுடன், "அவளைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்"னு, பக்கத்து வீட்டுக்காரன் விளம்ப்ரம் கொடுத்திருக்கான்.

எனக்கு பகீர்னு ஆயிடுச்சி ...

இது என்னடா வம்பாப் போச்சின்னு நினைச்சிக்கிட்டு, அவன் வீட்டுக்குப் போனேன். ரொம்ப சோகமா உட்கார்ந்துகிட்டிருந்தான். பாவம். மனைவி இல்லாத கவலை.

"என்னடா ... உன் பொண்டாட்டியை காணோம்னு உன்னோட பக்கத்து வீட்டுக்காரன் பேப்பர்ல விளம்பரம் கொடுத்திருக்கான் ... வாடா , நாம ரெண்டு பேரும் போய் ஏன்னு கேட்கலாம்"

"அட போங்கண்ணே ... நீங்க வேற??"

"ஏண்டா??"

"உன்னை நிம்மதியா வாழவிடமாட்டேன்னு" ஏற்கனவே எங்கிட்ட சவால் விட்டிருந்தான்னே ... பாவி ... இப்போ சமயம் பார்த்து என்னை மாட்டிவிடுறான்"

நன்றி ;முகநூல்

எழுதியவர் : கே இனியவன் (28-Oct-13, 3:31 pm)
பார்வை : 73

சிறந்த நகைச்சுவைகள்

மேலே