அறிவியலின் அனுதாபங்கள்
இத்தாலியில் ஓர்
எலுமிச்சை பழம்
ஹிட்லர் செய்து வைத்த
செய்வினை
கண்டுபிடிப்பு-
இந்தியக்கோடாங்கி
அதிரடி பேட்டி......
அமெரிக்க அய்யனார்
குறிசொல்ல வருகிறார்
இந்தியக்கோடாங்கியின்
இன்னொரு ட்ரெண்ட்...
தெரு முற்றத்தில்
ஓர் மைல்கல்.
திகைத்து நிற்கிறது
நிலவுக்கு போக
வழி தெரியாத
ஏவுகணைகருப்பர்-
சாமிக்குத்தம்.
பாரியின் பேச்சைக்கேட்டு
பறம்புமலையை விட்டோம்
அதினால்
காரியும் ஓரியும்
பன்னாட்டுடன் ஒப்பந்தம்.....
ஐஎம்இஐ(IMEI)
எண்ணைக்கேட்டு,
யுவான்சுவாங் முதன்முதலாய்
இந்தியாவுக்கு வரலாமா?
சீனத்தளபதி
செல்லிடப்பேசியில்
வேண்டுதல்.....
ஒளிச்சேர்க்கை தொழிலில்
நட்டம்.
சூரிய வங்கியிடம்
வாங்கியகடனை கட்டமுடியாத
நிலையில்
தாவரவிஞ்ஞானிகள்...!!
மின் உபரியால்
ஔவையார் வீட்டு
ஆத்திச்சூடி தெரிகிறது.
தமிழக பேடிகளைப்பார்த்து
சிரிக்கிறார்
குஜராத் மோடி....!!!!!
அணுவைப்பிளந்தவனுக்கு
அணுமின் நிலையத்தில்
வேலையில்லை
வறுமையில்வாடுகிறாராம்
டால்டன்.
தடகள வீராங்கணை
சாந்தியின் கண்ணீர்க்குமுறல்
(அனைத்து அன்பு உள்ளங்களின் கருத்துக்களுக்கு
மனமார்ந்த நன்றிகள்)