புதிதாய் பூத்தன

மு.கு : முறையே KPP அய்யா , சந்தோஷ் குமார் ராஜேஷ் கிருஷ்ணன் திங்களை தென்றலை காதலை கவிதையில் தெரிவித்த கருத்தினில்
புதிதாய் பூத்தன இவை .



திங்கள் சுற்றுது பூமியை
பூமி சுற்றுது காதலில்
தென்றல் சுற்றுது மலர்களை
திங்களையும் தென்றலையும் தானா
எங்களை இல்லை ஏனோ என்று
மலர்கள் கேட்குது கவிஞனை !

வானம் வசப்பட வேண்டும்
திங்கள் வசப்பட வேண்டும்
தென்றல் வசப்பட வேண்டும்
மலர்கள் வசப்பட வேண்டும்
காதல் வசப்பட வேண்டும்
வசப்பட்டால் கவிதை வசப்படும் !

வானத்தின் அற்புதம் நிலவு
பூமியின் அற்புதம் பெண்கள்
பெண்ணின் அற்புதம் காதல்
காதலின் அற்புதம் கவிதை !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (29-Oct-13, 9:44 am)
பார்வை : 115

மேலே