பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் கொண்டாடும்
பேரழகு ஆண்பிள்ளை
பிரம்மாவின் படைப்பினிலே
நீ பூமியிலே சிறந்தபிள்ளை ............
சீர்மிகு படைப்பெடுத்து
ஸ்ரீ ஹரி நீ பிறந்தாய்
பிறர் சோகங்களை நீ களைந்து
சுகங்கள் பல நீதந்தாய் ..........
ஜெயம் பலவே பெற்றுவந்து
ஜெயபிரகாஷ் மகனானாய்
நற்பண்புகள் பல பெற்று
பரிமளாவின் மகனானாய் ..........
உன் முகமோ பௌர்ணமியே
உன் உடலோ பொன் நிறமே
நீ சிரிக்க நெஞ்சினிக்கும்
உன்முகம்காண கண்துடிக்கும் ..........
நீ பேச புது மொழிதான்
நீ ஆட புது நடனம்
உன் அசைவனைத்தும் ரசனையடா
உன்னை அள்ளி கொஞ்ச இனிமையடா ...........
உன் புன்முறுவல் ஓவியமாகும்
புலம்பல்கள் கவிதையாகும்
தத்தி நடப்பது நாட்டியமாகும்
நீதுள்ளி நடக்கையில் மானினம்தோற்கும் .......
பற்கள் இரண்டும் வைரமாய் மின்ன
இமைகள் இரண்டும் கருணை சொல்ல
உதட்டு முத்தங்கள் அன்பை பகிரும்
உன்னை சுமக்க உள்ளம் மகிழும் ..........
பற்றிழுக்கும் பார்வை கொண்டாய்
பகைமறக்கும் சிரிப்பு கொண்டாய்
புதுப்புது பாஷை பேசி என்னை
புரியாமல் திணற விட்டாய் ...........
உன்னைக்காணும் ஓர் நொடியும்
உலகம் மறப்பேன் என்னை துளைப்பேன்
உன் சிரிப்பு சூறாவளியில்
தினம் சிக்கி சிக்கி சின்னாபின்னமாவேன் ...........
பஞ்சு போன்ற கால்கள் பட
உதைகள் கூட ஒத்தடமாகும்
பிஞ்சு கையின் வருடல்களில்
என் பிறவி துன்பம் மறைந்துபோகும் .........
பிறந்தநாள் கொண்டாட்டத்தில்
வாழ்த்துவதற்கு பலரிருக்க
என் உளமார வாழ்த்துகிறேன்
என் உயிரே நீ நலம்பெறவே ...........
பெரியப்பா பெரியம்மா
பிள்ளையில்லா தம்பதிகள்
நீயிருக்க என்னகுறை
எங்கள் இறுதிவரை நீயே துணை !