வெள்ளை நிலா ஒன்று
கோள்கள் சுற்றுது
சூரியனை !
பூமியும் சுற்றுது
சூரியனை !
வெள்ளை நிலா ஒன்று
சுற்ற வந்தது பூமியை !
மகிழ்ச்சியில்
தன்னைத்தானே
சுற்றத் துவங்கியது பூமி !
அன்று முதல்
இரவும் பகலும்
இடைப்பட்ட மாலையும்
காதலும்
நமக்குக் கிடைத்தது
பூமியில் !
~~~கல்பனா பாரதி~~~