பயிற்சி

பயிற்சி
*******
ஒரு திருடனுக்கு வயதாகி விட்டது.அவன் மகன் ,தனக்கு திருட்டுத் தொழில் செய்ய பயிற்சி கொடுக்குமாறு கேட்டான்.திருடனும் அன்றிரவே மகனை ஒரு வீட்டிற்குத் திருட அழைத்து சென்றான்.அந்த வீட்டின் ஒரு அறையைத் திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்று மகனைப் பார்க்க சொன்னான்.அந்த அறைக்குள் மகன சென்றதுமே அறையை சத்தத்துடன் மூடி வெளியில் தாழ்ப்பாளும் போட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டான்.சத்தம்கேட்டு வீட்டிலிருந்த அனைவரும் விழித்து விட்டனர்.
மாட்டிக்கொண்ட மகன் பயந்து போனான்.ஒரு நிமிடம் தந்தையின் மீது அவனுக்குக் கோபம் வந்தது.மறு நிமிடம் அங்கிருந்து எப்படி தப்பிச் செல்வது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டான்.உடனே ஒரு பூனையைப் போல சப்தமிடத் துவங்கினான்.அதைக் கேட்ட,ஒரு வேலைக்காரன்,அறையின் உள்ளே மாட்டிக் கொண்டிருக்கும் பூனையை வெளியே கொண்டுவரக் கதவைத் திறந்து வைத்தான்.கதவு திறந்ததும் திருடனின் மகன் வேலைக்காரனை தள்ளிவிட்டு வெளியே ஓடினான்.எல்லோரும் அவனைத் துரத்தினர். வீட்டின் சுற்றுச் சுவர் அருகே வந்தவன் அங்கு ஒரு கிணறு இருப்பதைப் பார்த்து அதற்குள் ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டு இருளில் மறைந்து கொண்டான்.ஓடி வந்தவர்கள் அவன் கிணற்றில் குதித்து விட்டான் என்று கருதி அது பெரிய கிணறு என்பதால் அதில் மூழ்கி இறந்து விடுவான் என்று நம்பி மெதுவாக வீட்டிற்குள் திரும்பினர்.அவர்கள் சென்றதும் அவன் வீட்டை விட்டு வெளியேறினான்.தன தந்தையின் செயல் தனக்கு பயிற்சி கொடும்பதர்காகத்தான் என்பதனை உணர்ந்த அவன்,முதல் தேர்விலேயே தான் எப்படி வெற்றி பெற்றோம்என்பதை தந்தையிடம் விளக்க வேண்டும் என்ற ஆசையுடன் வீட்டிற்கு வந்து தந்தையிடம் சொல்ல ஆரம்பித்தான்.தந்தை சொன்னான்,''கதை எல்லாம் எதற்கு?இப்போது நீ இங்கே இருக்கிறாய்.அதுவே போதும்,நீ என் தொழிலைக் கற்றுக் கொண்டு விட்டாய்.எனக்கு மகிழ்ச்சி.''

நன்றி இருவர் உள்ளம் தளம்

எழுதியவர் : கே இனியவன் (30-Oct-13, 4:49 pm)
Tanglish : payirchi
பார்வை : 96

மேலே