தமிழின் பெருமை உணர்வீர்

பாரே போற்றும் பைந்தமிழ்
இன்பம் பொங்கும் இனியதமிழ்
பொற்றமிழ் அறிஞரின் நற்றமிழ்
கலப்படம் இல்லா தூய தமிழ்
சங்கம் வளர்த்த இன் தமிழ்
இலக்கண நிறை இலக்கியத் தமிழ்
பொய்யாமொழியானின் அழியாத் தமிழ்
கற்கண்டு சுவையுள்ள கம்பன் தமிழ்
பெருமைமிகு தகுதி கொண்ட
செம்மொழியாம் நம் தமிழ்மொழி !
-------
வரிசையும் நீளலாம் வகைப்படுத்தினால்
தித்திக்கும் நம்மொழி என்றுமே தமிழ்மொழி !
பெருமையும் சிறப்பையும் பேசலாம் நாளும்
சிறுமை அடையார் என்றும் நம்மொழியால் !

அன்னைதமிழில் பேசினால் அவமானமாம் சிலருக்கு
ஆங்கில மோகத்தின் தாக்கமே அவர்களுக்கு !
இன்றைய தலைமுறை வளரும் வருங்காலம்
இழிவாய் நோக்குது தமிழில் பேசுவோரை !

அடுத்தவர் மொழியை நாம் தடுக்கவில்லை
அன்புத் தமிழில் பேசினால் தவறேயில்லை !
பிறந்தவுடன் சொல்வது அம்மா எனும் நம்மொழியே
வளர்ந்தவுடன் வெறுப்பது ஒதுக்குவதும் மடமையே !

இந்நிலை வளர்ந்தால் அடுத்த தலைமுறைக்கு
தமிழ்மொழியின் அருமை பெருமை புரியாது !

மறவாமல் வழங்கிடுக அறிவுரையாய் மக்களுக்கு
தவறாமல் புழங்கிட தமிழிலே இல்லங்களில் !

மொழிப்பற்றே ஒருஇனத்தை இணைத்திடும் என்றும்
தாய் மொழியே தரணியில் எங்கும்நம் அடையாளம் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (30-Oct-13, 9:39 pm)
Tanglish : thamizhin perumai
பார்வை : 1432

மேலே